ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

கோபல்லபுரத்து மக்கள்


                                                                                    கி.ராஜநாராயணன்
கோபல்லபுரத்து மக்கள் 34 வாரங்கள் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக் கணக்கான வாசகர்களின் வரவேற்பையும் சாகித்திய அக்காதெமியின் பரிசையும் பெற்ற நாவலிலிருந்து சில பகுதிகள்...
modern-art-17
முதல் முதலில் அந்தக் கிராமத்தில் ஒரு அரசியல் பொதுக்கூட்டம் நடந்தது. பெரிய பெரிய காங்கிரஸ் பேச்சாளர்கள் வந்திருப்பதாகப் பேசிக்கொண்டார்கள்.

கூட்டம் ஆரம்பிக்கும் முன்னால் அவர்களில் சிலர் உணர்ச்சி ததும்பப் பாடல்கள் பாடினார்கள். அதைப்போலப் பாடல்கள் கிராமத்துக்குப் புதுசு. ஆவலோடு அவைகளைக் காது கொடுத்துக் கேட்டார்கள். தாளக் கட்டோடும் ராக அடக்கத்தோடும் ஒருத்தர் இப்படிப் பாடினார்

"ஆட்டித் தோலுக் கிடங்கொடுத்த
தாலே வந்த மோசம் - அத
னாலே வந்த மோசம்......"

எப்படி வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்கு முதல் முதலில் ஆட்டுத் தோல் வாங்க என்று இங்கே ஒரு வியாபாரியாக வந்து நம்மை ஏமாற்றி, நம்மவர்களைப் பிரித்து நமக்குள் சண்டை மூட்டிவிட்டு வஞ்சகமாக நம்மை அடிமைப் படுத்தி ஆண்டுகொண்டிருக்கிறான் என்று அழகாக விவரித்தது பாடல்

ஒவ்வொரு பாட்டு முடிந்ததும் பஜனையில் "கோவிந்த நாம சங்கீர்த்தனம்..." சொல்லு வதுபோல அவர்கள் "வந்தே மாதரம்" என்று சொல், அதை ஜனங்கள் எப்படி வாங்கித் திரும்ச் சொல்லணும் என்று சொல்லித் தந்தார்கள். இதனால் அந்த கோஷங்களைத் திரும்பத் திரும்பச் சொல்ல நேர்ந்தது. இது குழந்தைகளை ரொம்பத்தான் உத்ஸாகப் படுத்தியது! அவர்கள் ரொம்ப ஆர்வமாகக் கலந்து கொண்டார்கள் இதில். "வந்தே... மா...தரம்" என்று சொல்லி, தே என்பதைக் கொஞ்சம் நீட்டி, மா என்பதைக் கூடக் கொஞ்சம் நீட்டி ஒரு நாமசங்கீர்த்தனம் போல - ஒரு சுருதியோடு சேர்த்துச் சொல்லுவது போல - சொல்ல வேண்டும் என்று சொல்லிக் காட்டினார் அந்த சிந்து பூந்துறைக்காரர்

"வந்தே..மா..தரம்"
"அல்லா...ஹூ......அக்குபர்"
"நமதே.....ராஜ்யம்;அடைந்தே...தீருவோம்"
"போலோ;மஹான் மகாத்மா காந்தீக்கி;ஜே"

பிரசங்கிகள் ஒவ்வொருவராகப் பேசினார்கள். மக்களுக்குத் தெரிய வேண்டுமே என்று எளிய தமிழில் பேச்சு நடையில் கதை காரணங் களோடு ஜனரஞ்சிதமாகப் பேசினார்கள்

குடியின் கேட்டைப் பற்றி ஒருவர் பேசினார். "முந்தியெல்லாம் இப்படிக் கடையை ஏலத்துக்கு விட்டு ஊரு தவறாமல் கள்ளுக் கடையை நிலையாக இருக்கும் படி யாரும் பண்ணியதில்லை. இது இந்த வெள்ளைக் காரன் வந்த பிற்பாடுதான். கள்ளை வியாபாரப் போட்டிக்கு உட்படுத்தியதால், போதை அதிகம் இருக்க வேண்டும் kira2என்பதற்காக செயற்கையாக அதில் உடம்புக்குக் கேடு  விளைவிக்கும் பொருள்களை சேர்த்து விற்கும்படி ஆகிறது. இந்த அதிபோதையால் அரசுக்கு அதை விற்பவர்களுக்கும் நல்ல காசு என்பதோடு, போதையில் கிடக்ககும் மக்களின் தொகை அதிகமாக, ஆக ஆக அரசாங்கத்தை எதிர்த்து நடத்தும் போராட்டங்கள் திசை திருப்பப்பட்டு பலவீனப்பட்டுப் போகும். மக்கள் போதையில் கிடப்பது கொள்ளைக்காரர் களான வெள்ளைக் காரர்களுக்கு நல்லது. அதனால் நாம் முதலில் நமது மக்களைப் போதையிலிருந்து மீட்க வேண்டும். அதோடு நமது குடும்பப் ¦¡ருளா தாரத்துக்கு இந்தக் குடி உதவவே உதவாது. ஆகையால்த்தான் மகாத்மா காந்தி அவர்கள் கள்ளுக்கடை மறியலையும் தனது நிர்மாண திட்டத்தில் பெண்கள் பகுதியைப் பார்த்து, கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டே 'தாய்மார்களே உங்கள் வீட்டுக்காரர் களை, சகோதர்களை குடிக்கவிடாமல் எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள்' என்று உருக்கமாகக் கேட்டுக் கொண்டார்.

அடுத்தபடியாகப் பேசியவர் "பஞ்சாப் படுகொலை சொக்கலிங்கம்பிள்ளை" என்பவர். இவர் பெயரைக் கேட்டதுமே ஊர்க்காரர்கள் முதலில் நினைத்தது, பஞ்சாப் படுகொலைகளில் இவரும் சம்பந்தப்பட்ட ஆளாக இருப்பார் போலிருக்கு (!) என்று.

பேசியபிறகு தான் தெரிந்தது அவருக்கு அந்தப்பேர் வந்ததுக்கான காரணம். ஜாலியன் வாலாபாக்கில் நடந்த அந்தப் படுகொலையை அந்தப் பாஞ்சால நாட்டுமக்கள் பட்ட இன்னலை, அப்படியே இந்த மக்களின் கண்ணெதிரே, நடந்தது நடந்தது போலக் கொண்டுவந்து காட்டினார்.

பேசிக்கொண்டு வரும்போது அவருடைய முகம் அழுகையினால் கோணியது. கண்ணீரைத் துடைத்துக் கொள்ள மூக்குக் கண்ணாடியை பலதடவை கழற்றினார். அங்கிருந்த பெண்களை யெல்லாம் ஒரு நொடியில் அழவைத்து விட்டார். ஒரு அப்பாவின் தோளில் உட்கார்ந்து கொண்டிருந்த சிறுவன் ''வீட்டுக்குப் போகலாம் ப்பா'' என்று சொல்லும்போதும் அவனுக்கு நாக்குக் குழறியது.

ஒரு பாவமும் அறியாத மக்களை, பெண்களை மண்டி போட்டு நடக்கும் படியாக நிர்ப்பந்தித்து, வெள்ளை அதிகாரி அவர்களை சவுக்கால் அடித்ததாக அவர் சொன்னபோது இவர்கள் நெஞ்சிலே அந்த அடி விழுந்தது போலிருந்தது.

வெள்ளையர்கள் இவ்வளவு கொடூர மானவர்களா என்று தோன்ற ஆரம்பித்தது. இந்தக் கொடூரம் நாளைக்கு இங்கேயும் தோன்றாது என்று எப்படிச் சொல்ல முடியும்?

அவருக்குப் பிறகு பேசிய பிரசங்கி, பம்பாயில் நடந்த அந்நியத்துணி பகிஷ்கரிப்பு (புறக் கணிப்பு) போரட்டாத்தில் ஒரு சத்யாகிரகி மீது வேண்டுமென்றே லாரியை ஏற்றிக் கொன்றதைப் பற்றிச் சொன்னார்.

ஜெயிலுக்குப் போன இளைஞன் எதீந்தி நாத்தாஸ் என்பவர், ஜெயிலில் ஒருவாய் மோருக்காக - சாப்பாட்டில் ஒரு வேளைக் காவது கொஞ்சம் மோர் தரவேண்டும் அனைத் துக் கைதிகளுக்கும் என்று- 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து 64வது நாளில் உயிர் நீத்ததைப் பற்றிச் சொன்னார்கள். அதைக் கேட்கும் போதே அங்குள்ள மக்களின் மனசைப் பிசைந்தது அந்தச் செய்தி.

''எதீந்திரநாத் மரணம் பம்பாயை ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. பம்பாயை மட்டுமா, இந்தியா பூராத்தையும்தான். பத்திரிகைக ளெல்லாம் அதைப்பற்றித் தலையங்கங்கள் எழுதின. டெல்லி சட்டசபையில் அதைப்பற்றிக் கேள்விகள் கேட்டார்கள்.

''இந்தியா உஷ்ணமான நாடு. ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் உணவில் ஒரு வேளைக்காவது 'ஒரு வாய்' மோர் தர வேண்டாமா?'' என்று கேட்டார்கள்.

'' ஒ பொன்னான உயிரைப் பலிகொடுத்து, பத்திரிகைகளும் சட்டசபைக்குள்ளும் கேள்விக் கணைகள் தொடுத்து, மக்களும் கிளர்ந்தெழுந்த பிறகே இந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், ஜெயில் கைதிகளுக்குச் சிறிது மோர் தர ஒப்புக் கொண்டது.

''அப்பேர்ப்பட்ட கெடுங்கோலான அரசாங்கம் இது'' என்றார் பிரசங்கி.

கூட்டத்தின் கடைசியில் பேசியது ஒரு சிறிய பையன் ! இளங்கோ என்று பேர் சொனனார்கள். பத்து வயசுக்குள்ள தானிருக்கும். மேஜை மீது அவனைத் தூக்கி விட்டார்கள். எல்லோருக்கும் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

கால்களையும் கைகளையும் ஆட்டி உடம்பை நிமிர்த்தி அழகான தமிழில் அவன் அமளப்பொரி பொரிந்தான். பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தையே, 'என்னோட சண்டைக்கு வாராயா?'' என்று கேட்பது போலிருந்தது! கைதட்டி அவனை உத்ஸாகப்படுத்தினார்கள் வந்திருந்த பிரசங் கிகள்; அதைப் பார்த்த ஊர்க்காரர்களும் கை தட்டினார்கள்.

கூட்டத்தின் முடிவில் ஜே கோஷம் வானைப் பிளந்தது. இப்படியாக இந்திய நாட்டு சுதந்திரப் போரின் சங்கநாதம் அந்த கிராமத்தினுள்ளும் வந்து ஒலிக்கத் தொடங்கியது. அந்த கிராமத்தின் குழந்தைகள், அந்த அரசியல் பொதுக்கூட்டத்துக்குப் பிறகு தங்கள் விளையாட்டில் ஒரு புதுவிளையாட்டைச் சேர்த்துக்கொண்டார்கள். சோளத் தட்டையின் நுனியில் சிறிய துண்டுத் துணிகளைக் கட்டிக் கொண்டு ஊர்வலம் வந்தார்கள். ''நமதே ராஜ்யம்: அடைந்தே தீர்வோம்'' என்று கத்தினார்கள்.

இப்படிப் பல ஊர்வலங்களை தினமும் குழந்தைகள் தவறாமல் நடத்தி விளையாண் டார்கள். ''பாரதமாதாக்கி ஜே'' ''மகாத்மா காந்திக்கி ஜே'' ''வந்தே...மா..தரம்''.

காலையில் எழுந்திருந்த கிராம முன்சீப் அய்யர் கச்சேரிக்கு (கிராமச்சாவடி) முன்னால் நின்று கொண்டு 'காச்மூச்' என்று கத்திக் கொண் டிருந்தார். என்னமோ ஏதோ என்று தலையாரித் தேவர் ஓடோடி வந்தார்.

''என்னடா இது: ஊருக்கு விநாசகாலமா? பாரு மரத்துக்கு மேலே. இப்படிப் பண்ணியிருக் கானே! மேலாவிலிருந்து வந்தா நா என்னடா பதில் சொல்றது? யாரு பண்ணுன காரியம்டா இது. குடியெக் கெடுத்தானே பாவி...''

மூச்சு இறைக்க அய்யர் கூவிக் கொண் டேயிருந்தார்.

தலையாரிக்கு முதலில் விளங்கவில்லை. பிறகுதான் தெரிந்தது ராவோடு ராவாய் யாரே ஒரு பாவி மூவர்ணக்கதர்- கொடியை பிள்ளையார் மேடை அரசமரத்தின் உச்சியில் கொண்டுபோய் உயரமான வருச்சியில் கட்டி அதை ''ஊரு உலகத்துக்கெல்லாம்'' தெரியும்படியாகப் பண்ணியிருந்தான்.

வெகுதூரத்திலிருந்து பார்த்தாலே தெரியும் படியாக இருந்தது கொடி. மங்கம்மாசாலை வழியே போகிறவர்களுக்குக் கட்டாயம் தெரியும். வேணுமென்றே அக்கிரமத்துக்காக - செய்த காரியமாப்பட்டது அய்யருக்கு. ''கூட்டம் போட்டுப் பேசினார்கள். சரி. பேசிட்டுத் தொலை. பொ. காத்தொடபோறதுன்னு இருந்தேன். இப்பொ 'அடி மடியிலே' கையைக் கொண்டாந்துட்டானெ? நா ஒர்த்தன் பிராமணன் இங்கெ உத்யோகம் பாக்றது யாருகண்ணெ உறுத்தறதுன்னு தெரியவில்லை.'' கொஞ்ச நேரத்துக்குள் ஒரு கூட்டத்தையே கூட்டிவிட்டார் தனது கூப்பாட்டின் மூலம்.

அதிகாலை மம்மல் நேரத்திலேயே சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டு தோட்டத்துக்குப் போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த நுன்ன கொண்ட நாயக்கரைப் பார்த்ததும் அய்யர் குரலை உயர்த்தினார். ''பாத்தியளா மொதலாளி, பயல்களோட காரியத்த!'' என்று அரச மரத்தின் உச்சியைக் காண்பித்தார்.

புகையும் சுருட்டைப் பற்களால் கடித்துக் கொண்டு இடது கைவிரல்களைப் புருவக்கட்டில் வைத்து 'கண்ணாடி போட்டு' அண்ணாந்து பார்த்தார் நுன்னகொண்ட.

பகீரென்றது வயிற்றில் அவருக்கு.

ம்செரி' என்று எண்ணிக்கொண்டு அங்கே கூடியிருந்த இளவட்டங்களின் முகங்களை ஒருபார்வையால் ஆராய்ந்தார். ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது அவரால்.

அய்யரைப் பார்த்துச் சொன்னார் கையில் சுருட்டை எடுத்துக் கொண்டு. ''கட்டுச்சோறு கட்டிக்கிட்டா வரப்போறான் அசலூரிலிருந்து இதுக்கு. சவத்துப் பயல்க.'' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். அவர் போனதுக்குப் பிறகும் கொஞ்ச நேரம் சுருட்டின் வீச்சம் அங்கே மணத்துக் கொண்டிருந்தது.

அய்யர் இந்த மாதிரி 'பேசக்கூப்பாடு' போடுவாரே தவிர தன்னுடைய கிராம மக்கள் பேரில் எப்பவும் எந்த விஷயத்துக்காகவும் மேலாவுக்கு எழுதி அனுப்பியதில்லை. இந்த விஷயங்களில் அவர் மக்களிடம் நல்ல பெயர் எடுத்திருந்தார்.

பிரிட்டிஷ் அரசு மூவர்ணக் கொடியைத் தடைசெய்திருந்தது. அதனால் எல்லா இடங்களிலும் இப்படி ராவோடு ராவாக கொடி ஏத்தங்கள் நடைபெற்றுவந்தன.

இதே கொடியைப் பிடித்துக் கொண்டு பகிரங்கமாக ரோட்டில் நடந்து கைதியானவர் களும் உண்டு. அப்படிப் கொடியைக் கையில் பிடித்துக்கொண்டு போகும்போது, 'போடு கீழே' என்று சொல்லி போலீஸார் லத்தி' யால் அறைவதும் உண்டு. உடம்பில் அடிமேல் அடி தொடர்ந்து விழும்போது, வலி பொறுக்க முடியாமல், தன்னையறியாமல் அய்யோ அம்மா என்று அலறுவதற்குப் பதில் ''வந்தேமாதரம் வந்தேமாதரம்'' என்று மாறிமாறிச் சொல்லு வார்கள். திருப்பூர் என்கிற ஊரில் குமரன் என்ற பேருடைய பிள்ளையாண்டான் ஒருத்தனை இப்படி அடித்தே கொன்று விட்டார்களாம் பாவிகள் என்று பேசிக்கொண்டார்கள். தலையாரியை மரத்தின் மேலே ஏறி அந்தக் கொடியை அவிழ்க்கும்படிச் சொன்னார் கிராம முன்சீப் அய்யர். வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு தலையாரி கிட்ணத் தேவர் மேலே ஏறினார். வளர்ப்பு ஆட்டுக்குக் குழைஓடிக்க மரம் ஏறிப் பழக்கந்தான் அவருக்கு. மேலே ஏறிப்போன கிட்ணத்தேவருக்கு மலைப்பு ஏற்பட்டது. ஒருப்பூட்டாக எழுந்துநின்று உச்சிக் கொம்பில் கொண்டுபோய் அதிலும் இருட்டு வேளையில் எப்படிக் கட்டினான் இந்தக் கொடியை என்று யோசித்தார். கொம்பைப் பிடித்து தொத்தி எப்படியாவது மேலே போய் விடலாம். கட்டுவதோ, அவிழ்ப்பதோ என்பது சாத்தியமே இல்லை என்று தோன்றியது. சாமி வந்து ஆவேசத்தோடு ரவ்வாளி போடுகிறவனை பத்துப்பேர் சேர்ந்து பிடித்தாலும் அமைக்க முடிவதில்லை. இதெல்லாம் ஒரு வெறிச்சியில் செய்கிற காரியம் என்று நினைத்தார்.

மேலே ஏறி எந்த ஆசில் இருந்து கொண்டு கட்டிய கொடிக்கம்பத்தை அவிழ்ப்பது என்று பார்த்தார். நினைக்க நினைக்க உடம்பு புல்லரித்தது. தவறிக் கீழேவிழுந்தால் அவ்வளவு தான். நச்சத்திரம் கழண்டுறும் என்பதோடு கழைக்கூத்தாடிக்காரன் சொல்லுவது போல எண்ணுவதற்கு ஒரு எலும்புக்கூடக் கிடைக் காது !

இறங்கிக் கீழே வந்த விஷயத்தைச் சொன்ன கிராம முன்சீப்பிடம் அதைக் கேட்டவர்களுக்கு மகிழ்ச்சியும் குஷியும் ஏற்பட்டது.

ஒருத்தருக்கொருத்தர் கலந்து யோசித் தார்கள். இது யார் செய்த காரியமாக இருக்கும் என்று. கொத்தனார் சாமிநாயக்கரும் அங்கே இருந்தார். துண்டை இழுத்துப் போர்த்திக் கொண்டு, குளத்தின் கைப்பிடிச் சுவரில் உட்கார்ந்து முழங்கால்களை ஆட்டிக் கொண்டு, இந்தத் தலையாரி எப்படித்தான் அந்தக் கொடியை அவிழ்க்கிறான் பார்ப்போம் என்று. அவருக்குப் பக்கத்தில் வந்து செவிட்டு குருசாமி நாயக்கர் உட்கார்ந்து கொண்டு சந்தோஷத் துடன் கேட்டார் ''இத எப்பிடி அங்கன போயி கட்டியிருக்கான்!'' சாமிநாயக்கர் பதில் சொல்லாமல் வேகமாகக் காலை ஆட்டினார். மனசுக்குள் 'எங்கலெ வந்து மெல்ல விளாறு ஒட்டுதெ' என்று நினைத்துக் கொண்டார்.

பேருதான் செவிட்டு குருசாமி நாயக்கர். யாருடைய ரகசியங்களும் அவர் காதுக்குள் நுழைந்துவிடும். நுழைத் வேகத்தில் பத்து ஜோடி காதுகளில் போய் எதிரொலிக்கும். யார் என்ன பேசிக் கொண்டிருந்தாலும், செவிட்டு குருசாமி நாயக்கர் வாரார் என்றால் பேச்சை நிப்பாட்டி விட்டுப் பாட ஆரம்பிப்பார்கள் !

கிராமத்தில் எப்பவாவது சில காரியங்கள் நடக்கும். யார் இதைச் செய்திருப்பார்கள் என்று யூகிக்கவே முடியாதபடி இருக்கும். அப்போது செவிட்டு குருசாமி நாயக்கர் எங்கே என்ற எல்லோரும் தேடுவார்கள். அவரும் ஓடியாடி, விஷயத்தின் நுனி நூலைப் பிடித்துக் கொண்டு வந்து தந்துவிடுவார்.

இளவட்டங்களின் ஒருமித்த ஏளனப்பார்வை தலையாரியை உசுப்பிவிட்டு விட்டது. குழை அறுக்கும் கத்தி கட்டிய தொறட்டிக் கம்பை எடுத்துக்கொண்டு வந்தார் வேகமாக. மரத்தில் ஏறி, அதைக் கொடுக்கச் சொல்லி வாங்கி, ஒவ்வொரு கொம்பிலும் அதைத் தொங்கவிட்டுக் கொண்டே மேலே ஏறிப்போனார். வசமான ஒரு கிளையில் இருந்து கொண்டு உச்சிக்கொம்பில் கட்டிய கயிற்றைக் கொஞ்சங்கொஞ்சமாக அறுத்துக் கொடியோடு கம்பைக் கீழே விழச்செய்தார்.

கீழே விழுந்த கொடியை கிராம முன்சீப் அதைக் கம்பிலிருந்து பிரித்து எடுத்தார். அதை என்ன செய்வது என்றே தெரியவில்லை ! வீட்டுக்கும் கொண்டு போக முடியாது கச்சேரியில் வைத்துக் கொண்டிருக்கமுடியாது. பிள்ளையார் சதுர்த்தி முடிந்ததும் களிமண் பிள்ளையாரை குளத்து தண்ணீரில் கொண்டு போய் போடுவதுபோல, அவர் அதில் நாலைந்து கற்களை எடுத்து வைத்து மூட்டைபோல் கட்டினார். குளத்தில் கொண்டு போய் வீசி எறிந்துவிட்டு, விசுக்விசுக்கென்று வேகமாக வீட்டைப் பார்க்க நடந்தார். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் கைதட்டிப் பலமாகச் சிரித்தார்கள்.

இது நடந்து கொஞ்சநேரத்துக்கெல்லாம், பார்வதியம்மன் கோவிலுக்கு பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன்னுடைய மாட்டு வண்டிக்கு அருகே நின்றுகொண்டு ''ஊர்பய பிள்ளைகளை'' வாய்க்கு வந்தப்படி திட்டி நொறுக்கிக் கொண்டிருந்தார் வெல்லம் ரங்கசாமி நாயக்கர்.
அருடைய வண்டிப் பைதாவில் யாரோ சாக்பீஸால் வந்தேமாதரம் என்று எழுதிவைத்து விட்டார்களாம். ''நா ஒரு வண்டி வச்சிப் பெளைக்கிறது இந்தப் பயபிள்ளெகளுக்குப் பிடிக்கலெ'' என்று சொல்லிக் கொண்டே அதை அழித்தார். அழித்ததில் எழுத்துக்கள் கலைந்த தே தவிர மறையவில்லை. வாளியில் தண்ணீர் கொண்டு வந்து துணியை மூக்கித் துடைத்துக் கொண்டிருந்தபோது செவிட்டு குருசாமி நாயக்கர் வந்து ''என்ன மாமா இது?'' என்று விசாரித்தார். ''பாத்தியாடா இந்த கொடுமயெ; எந்த நாறப்பய புள்ளையோ வந்து ஏம் வண்டியில் 'வந்தேமாதம்' எழுதித் தொலைச்சிருக்கான் பாத்துக்கொ.''

''அதானெ மாமா, சர்க்காருக்கு தெரிஞ்சா அம்புட்டுதான். வண்டியும் பொயிரும், நீங்களம் கம்பியெ எண்ணணும். செருக்கிபிள்ளையளுக்கு வந்தே மாதரம் எழுத வேற எடமே கெடைக் கலை பாத்தியளா !''

வேகம் வந்துவிட்டது வெல்லம் ரங்கசாமி நாயக்கருக்கு. தனக்கு எத்தனை வசவுகள் தெரியுமோ அத்தனையும் மனப்பாடமாக ஒப்பிப்பதுபோல மள மளவென்று சொல்லிக் கொண்டே போனார்.

ஊர்ப்பிள்ளைகளெல்லாம் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இது வேறு அவருக்கு எரிச்சலாக இருந்தது. அவர்களைப் பார்த்து எரிந்த விழுந்தார். அவர்கள் நகருவது போல பாவலாக் காட்டினார்களே தவிர நகரவில்லை. ஆகவே அவர்களையும் ஒரு பாட்டம் வசவுகளால் 'அர்ச்சனை' செய்துக் கொண்டே வாளியையும் துணியையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் கிளம்பினார். நாலு எட்டுகள்தான் எடுத்து வைத்து நகர்ந்திருப்பார். யாரோ ஒரு பையன் அவரைப் பார்த்து வந்தே மாதரம் என்று கத்தினான். மற்ற பிள்ளைகள் அதை வாங்கிச் சொன்னார்கள் !

நாயக்கருக்கு ஆங்காரம் வந்துவிட்டது. ''எவண்டா அவன் வந்தே மாதரம் சொன்னது'' என்று கேட்டார்.

''பொடிப்பய புள்ளக. நீங்க போங்க மாமா'' என்று சமாதானப்படுத்தினார் செவிட்டுக் குருசாமி நாயக்கர்.

சமாதானம் பண்ணவும் சேர்த்துப் பிடித்துத் தடுக்கவும் ஒரு ஆள் கிடைத்துவிட்டால் அதுக்கென்று ஒருவேகம் வருமே; அந்த 'வேகம்' வந்தது வெல்லம் ரங்கசாமி நாயக் கருக்கு. அதன் பலனை அவர் ஆயுள் பூராவும் அனுபவித்தார் ! தினமும் காலையில் வந்து பார்க்கும் போதெல்லாம் அவருடைய வண்டிப் பைதாவின் அலகில் வந்தே மாதரம் எழுதியிருப்பதும், அதை அவர் வாளியும் தண்ணீரும் கொண்டு வந்து துடைத்துக் கொண்டே வைது விட்டுப் போவதும் கொஞ்ச நாள் இருந்தது. ஒருநாள் காலையில் வாளியும் தண்ணீரோடும் வந்து பார்த்தபோது, சாக்பீஸ¤க்கு பதில் கீல் எண்ணெய் கொண்டு எழுதப்பட்டிருந்தது! ரொம்ப நேரம் அதைச் சொரண்டி எடுத்துக் கொண்டிருந்தார். அன் றைக்கு அவர் வேலைக்குப் போக முடியவில்லை. இனி வண்டியை வெளியே வைத்தால் சரிப்பட்டு வராது என்று பைதாக்களை அச்சிலிருந்து உருவி எடுத்து, சட்டத்தையும் வீட்டுத் தொழுவுக்குள் கொண்டுபோய் வைத்துக் கொண்டுவிட்டார். பிரச்சனை அதோடு முடியவில்லை. எந்நேரமும் நாலு பையன்கள் அவருடைய வீட்டு வாசலைப் பார்த்துக் கொண்டே கொஞ்சதூரத்தில் காத்துக் கொண்டிருப்பார்கள். வெளியில் அவருடைய தலை தெரிய வேண்டியதுதான் தாமதம், வந்தே மாதரம் என்று கத்துவார்கள். திட்டிக் கொண்டே அவர்களைக் கொஞ்ச தூரம் விரட்டுவார். தெருவிலோ காட்டிலோ எங்கே அவரைக் கண்டாலும் பிள்ளைகள் வந்தே மாதரம் என்று தூரத்தில் இருந்து கொண்ட கூப்பாடு போட்டுச் சொல்லுவார்கள்.

ஊர்மடத்துக்கு முன்னால் பிள்ளைகள் தெல்லு விளையாடிக் கொண்டிருந்தார்கள். வெளியூர்க்காரர்கள் யாரோ ரண்டுபேர் வந்து வெல்லம் ரங்கசாமி நாயக்கர் வீடு எது என்று பையனிடம் விசாரித்தார்கள்.

''என்னது, வெல்லம் ரங்கசாமி நாயக்கரா'' என்று முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு கேட்டான் அதில் ஒரு பையன் ஒன்றுமே தெரியாதது போல.

''அதாண்டா நம்ப வந்தேமாதர நாயக்கர் வீட்டைக் கேக்கறாங்க'' என்றான் மற்ற ஒருவன்.

''வந்தே மாதர நாயக்கரா!'' என்று கேட்டார் வந்தவர்களில் ஒருத்தர்.

''ஆமாம். அது தெரியாதா ஒங்களுக்கு? அவரு இப்ப வந்தேமாதரம் கட்சியிலெ சேந்துட்ட ரில்லெ'' என்றான் பையன். இவர்கள் சிரித்த விதம் வந்தவர்களுக்கு, இது தெரியாதா உங்களுக்கு என்பது போல் பட்டது.

''ஏங்கூட வாங்க நாங் காட்டுரென்'' என்று அவர்களை அழைத்துக்கொண்டு போய், ''அந்தோ தெரியிதில்லெ, அந்தக் கல்லு வீடுதான்'' என்று காட்டிவிட்டு வந்தான்.

''என்னடே ''வந்தே மாதரம்'' இருந்தாரா? என்று மடத்தில் பதினைஞ்சாம்பிள்ளை விளையாட்டில் உட்கார்ந்து ஆடிக்கொண்டி ருந்த கொண்டுசாமி கேட்டார் குறும்பாகச் சிரித்து.

''இருக்காரு, தொளுவுக்குள்ளெ சத்தம் கேட்டது'' என்றான்.

''என்ன விசயமாத் தேடி வந்திருக்காகளாம்?''

''பசுமாடு ஒண்ணு வெலைக்கி நிக்கில்லா அவரு தொளுவுல; அதெ வாங்கீட்டுப்போக''

''அத அவரு யான வெலெ குருதெ வெலெ சொல்லுவா ரெ''

''சொன்னா என்ன வந்தேமாதரம்னு மாத்திரம் சொல்லுங்க; செ, நம்ம கச்சி ஆளுகள்ளெ வந்திருக்காக போலுக்குன்னு நெனச் கொஞ்சம் கொறைச்சிக் கொடுத்துருவாருன்னு சொல்லிக் கொடுத்துட்டுத்தாம் வந்திருக்கென்'' என்று அந்த வினாடியில் அவனுக்குத் தோன்றியதைச் சொன்னான். அவனுடைய கற்பனையை மடத்தில் இருந்தவர்கள் பாராட்டிச் சிரித்தார்கள்.

நுன்னகொண்டநாயக்கர் ஒருநாள் வெல்லத் தைக் கூப்பிட்டு ''ஏண்டா யாரு என்ன சொன்னா ஒனக்கென்ன. எதுக்காக அப்படிக் கோவப் படணும். நீ அப்படிக் கோவப்படப்படத்தான் அதும் அதிகமாகும்'' என்று சண்டை பிடித்தார். ''நா யாருக்கு என்ன செஞ்சென் பெரியப்பா. என்ன இப்படிக் கண்ணுலெ காங்காம வையிராங்களெ'' என்று சொல்லும்போது அவருக்குத் தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது.

வெல்லம் ரங்கசாமி என்று துலங்கி வந்த அவருடைய பெயர் அதன்பிறகு ''வந்தேமாதர நாயக்கர்'' என்று சொன்னால்தான் தெரியும் என்கிற அளவுக்கு வந்துவிட்டது. அவர் விரும்பினாலும் - விரும்பாவிட்டாலும் அதுவே அவருடைய பட்டப்பெயராக நிலைத்து நின்றது அவருடைய வாழ்நாள் பூராவும் ! அதுக்குப் பிறகும்கூட.

கையில் கரித்துண்டோ சாக்பீஸோ எது கிடைத்தாலும், சுவர் என்று ஒன்று கிடைத்து விட்டால் அந்தவூர் குழந்தைகள் தப்பும் தவறுமாக வந்தேமாதரம் என்று எழுதியும் கை ராட்டையில் படத்துடன் மூவர்ணக் கொடி யையும் வரையாமல் விடமாட்டார்கள். 




வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

அலையும் நுரையும்


கி.ராஜநாராயணன்
                                                                             அலையும் நுரையும் 

இது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு நகையை அடமானம் வைப்பதற்காக வங்கிக்குச் சென்றிருந்தேன். மனைவியின் கழுத்தில் போட்டுப் பார்த்திருந்த நகையை, ஒரு காகிதத்தில் சுருட்டி சட்டைப் பையில் வைத்தபடி வங்கியின் முன்னால் காத்திருந்தபோது, அது வரை நகைக்கு இருந்த வசீகர மும் அழகும் காணாமல்போய் அது வெறும் ஜடப் பொருளாக இருந்தது.
  நகையை வாங்கும்போது மிக அழகான வெல்வெட் பெட்டியில் வைத்துத் தந்தது நினைவில் இருக்கிறது. அது ஒரு ஊதா நிற வெல்வெட். தங்கச் சங்கிலி அதில் ஒய்யாரமாகப் படுத்திருந்தது. அடமானம் வைக்கப் போகும்போது எதற்காக இத்தனை ஒப்பனை என்று3754766806_03b61a4d8e_mநினைத்தோ என்னவோ, அதை ஒரு செய்தித்தாளின்கிழிந்த காகிதத்தில் சுருட்டி மடித்துக் கையில் தந்திருந்தாள். விருப்பமான பெண்ணுக்கு நகையை வாங்கித் தருவது வாழ்வின் சந்தோஷமான ஒரு தருணம் என்றால், அதை கழற்றி வாங்குவது வெகு வேதனை யான தருணம்!
வேம்பு பூத்திருந்த காலமது. கூட்டுறவு வங்கியின் படிகள் முழுவதும் வேப்பம்பூக்கள் சொரிந்து கிடந்தன. நான் காலடியில் கிடக்கும் பூவை கையில் எடுத்துப் பார்க்கக்கூட முடியாத கூச்சத்துடன் காத்திருந்தேன். பையில் நகையுடன்காத்துக்கிடப்பது ஏனோகோவலனை நினைவுபடுத்தியது.

கண்ணகியிடமிருந்து சிலம்பு வேண்டும் என்று கேட்பதற்கு முன்னால், மதுரை நகரின் வெளியில் உள்ள ஆய்ச்சியர் குடியிருப்பில், நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்ணகி சமைத்த உணவை ருசித்துச் சாப்பிடுகிறான். மனைவியின் அருமை அப்போதுதான் புரிகிறது. கடந்த காலத்தில் கோவலன் தவறு செய்துவிட்டதாக கண்ணகி நினைவு கூர்கிறாள். கோவலனும் நெகிழ்ச்சியுடன் ஒப்புக் கொள்கிறான். பிறகு, தயக்கத்துடன் தாழ்ந்த குரலில் அவளது காற் சிலம்பை கழற்றி வாங்கிக் கொண்டு செல்கிறான். காப்பியக் கதாநாயகர் களே எச்சில் விழுங்க முடியாத துக்கத்துடன் மனைவியிடம் இருந்து நகையைக் கழற்றி வாங்கும் நிலையில் இருக்கும்போது, சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம்?
வங்கியில் நகையை அடமானம் வைப்பதற்கு நிறைய விதிமுறைகள் இருந்தன. Ôநகையைப் பரிசோதனை செய்துபார்க்கும் பத்தர் வரும் வரை காத்துக் கொண்டு இருங்கள்Õ என்று சொன்னார்கள். என்னைப் போலவே அறுபது வயதான நபர் ஒருவர், பச்சை சேலை கட்டிய, எண்ணெய்ப் பசையில்லாத தலைகொண்ட நாற்பது வயது கிராமத்துப் பெண்மணி ஒருவர், பனியன் தெரிய சட்டை போட்டிருந்த வியாபாரி ஒருவர் என யாவரும் ஒரே பெஞ்சில் உட்கார்ந்திருந்தோம்.
எதிரில் இருந்த போர்டில் நகையை மீட்க முடியாமல்போய், ஏலத்துக்கு விடப்போகும் நபர்களின் பட்டியலும் முகவரியும், கட்ட வேண்டிய தொகையும் இருந்தன. நான் அந்தப் பெயர்களை ஒவ்வொன்றாகப் படித்துக்கொண்டு வந்தேன். சொற்பத் தொகை முந்நூறு ரூபாய்க்குகூட அடமானம் வைக்கப்பட்டு இருக்கிறது. அதுகூட மீட்க முடியாமல் ஏலத்துக்கு போகப் போகிறது. நகையை வைத்த நபரின் பெயர் சந்தானலட்சுமி என்றிருந்தது. முகம் காணாத சந்தானலட்சுமியைப் பற்றியும், அவளது வாழ்க்கையில் என்ன நடந்திருக்கும் என்பது பற்றியும் மனம் தானாக கற்பனையைக் கிளைவிடத் துவங்கியிருந்தது.
பத்தர் ஒரு பைக்கில் வந்து இறங்கினார். பாரியான உடம்பு. நெற்றியில் பெரிதாக குங்குமம் வைத்திருந்தார். இவரை நகைக்கடை பஜாரில் பார்த்திருக்கிறேன். அங்கிருந்த யாவரையும் பார்த்து ஒரு புன்னகை சிந்தியபடி உள்ளே நுழைந்தார். என் முன்னே நின்றிருந்த வயதானவர், தனது கையில் வைத்திருந்த மஞ்சள் பையிலிருந்து சிறியதும் பெரியதுமான நகைகளை அங்கிருந்த மேஜையில் கொட்டினார். நாலைந்து மோதிரங்கள், இரண்டு ஜோடி கம்மல்கள், மூன்று வளையல்கள், ஒரு கம்பி செயின். ஒரு ரெட்டை வடம் செயின்... பத்தர் ஒவ்வொரு நகையாக எடுத்துப் பார்த்து உரசிக்கொண்டு இருந்தார்.

தனது மகனுக்கு மலேஷியாவில் வேலை கிடைத்துள்ளதாகவும், அங்கே போவதற்குப் பணம் புரட்ட வேண்டும் என்று வீட்டில் தனது மனைவி, மருமகள் இருவரது நகைகளையும் அடமானத்துக்குக் கொண்டு வந்திருப்பதாகவும் வயதானவர் சொன்னார். அதில் சில நகைகளை அடமானம் வைக்க முடியாது என்று விலக்கிவைத்த பத்தர், மற்றவற்றை எடை போட்டுக்கொண்டு இருந்தபோது தராசுக்கு இரண்டு தட்டுகள் மட்டுமில்லாமல் மூன்றாவது தட்டாக எதிரே இருப்பவரின் மனதும் ஆடிக்கொண்டு இருப்பது தெரிந்தது.
நகையை அடமானம் வைப்பது என்ற பேச்சு இவர்கள் வீட்டில் எப்போது துவங்கியிருக்கும்..? ஒரு முணுமுணுப்புகூட இல்லாமல் இந்த நகைகளை கழற்றிக் கொடுத்திருப் பார்களா? ஏன்... மூன்று வளையல்கள் இருக்கின்றன. மருமகள் ஒரு வளையலாவது இருக்கட்டும் என்று கழற்றித் தர மறுத்துவிட்டாளா? மலேஷியா போகிறவன் தனது வேலைக்குப் பின்னால் இத்தனை பேரின் இழப்புகள் இருப்பதை உணர்ந்திருப் பானா? இந்த நகைகள் மீட்கப்பட்டுவிடுமா? எனக்குத் தொடர்பில்லாத, ஆனால், என்னால் தவிர்க்க இயலாதபடி மனம் கேள்வி களைப் பின்னிக்கொண்டே இருந்தது.
பத்தர் எல்லாவற்றையும் எடை போட்டு சீட்டைக் கொடுத்தபோது, அது ஐம்பதாயிரத்துக்கும் குறைவாகவே வந்தது. வயதானவர் தயங்கித் தயங்கி தனது சட்டைப் பையிலிருந்து குழந்தைகள் கழுத்தில் போடும் ஒரு முருகன் டாலரை எடுத்து நீட்டி, அது தனது நாலு வயதுப் பேத்தி லாவண்யா வின் கழுத்தில் கிடந்தது என்றும், அவள் தூங்கிக்கொண்டு இருந்தபோது இரவிலே கழற்றி எடுத்துவிட்டதாகவும், அதை அடமானம் வைக்காமலே சமாளித்துவிடலாம் என்று நினைத்ததாகவும் சொன்னார்.
பத்தர் அந்த நகையையும் எடை போட்டுப் பார்த்தபடி சரியாக ஐம்பதாயிரம் ரூபாய் கணக்கு வருகிறது என்றார்.

வயதானவர் மௌனமாக எடைத் தட்டைப் பார்த்தார். அது காலியாக ஆடிக்கொண்டே இருந்தது. சீட்டை வாங்கிக்கொண்டு உள்ளேயிருந்த மற்றொரு வங்கி ஊழியரின் கையெழுத்தைப் பெறுவதற்கு நடந்துபோனார். அடுத்து நின்றிருந்த நான் கூச்சத்துடன் எனது சட்டைப் பையிலிருந்த நகையை வெளியே எடுத்து அவரிடம் நீட்டினேன். என்னைக் கவனிக்காமல் பத்தர் சிறிய சுருக்குப் பை ஒன்றில் வெற்றிலைகளைத் திணிப்பது போல் அடமானத்துக்குப் பெற்றிருந்த நகைகளைத் திணித்தார்.
எனக்குப் பின்னால் நின்றிருந்த கிராமத்துப் பெண்மணி, நான் அடமானம் வைக்கும் நகையின் மாடலை ஆசையோடு பார்த்தாள். பத்தர் தந்த சீட்டை எடுத்துக்கொண்டு நான் உள்ளே நுழைந்த போது, அந்த வயதான நபர் அதே மஞ்சள் பையில் பத்து ரூபாய், இருபது ரூபாய் கட்டுகளை வாங்கிக்கொண்டு வெளியே வந்தார்.

வாசலில் ஒரு பைக்கில் அவரது பையனும், பேத்தியும் காத்திருந்தார்கள். பையன் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. சிறுமி மட்டும் அந்தப் பெரியவரைப் பார்த்ததும் முகத்தைச் சுளித்தபடி Ôபோ... தாத்தா! நான் யார் கூடயும் பேச மாட்டேன். அம்மா, என் டாலர் செயினை கழட்டிவெச்சிட்டுத் தர மாட்டேங்குறா... கேட்டா திட்டுறாÕ என்று மழலைக் குரலில் சொன்னாள். தாத்தா அவளைத் தூக்கிக்கொண்டு “உனக்கு நான் ஜிலேபி வாங்கித் தர்றேண்டா கண்ணு!” என்றார்.
அந்தச் சிறுமி உதிர்ந்து கிடந்த வேப்பம்பூக்களை ஆசைஆசையாகக் கை நிறைய அள்ளினாள். பார்த்துக்கொண்டு இருந்தபோதே ஒரு வேப்பம் பூவை காதில் வைத்து, ‘கம்மல் எப்படியிருக்கு தாத்தா?’ என்று கேட்டாள். தாத்தாவோ, அவளது அப்பாவோ பதில் சொல்லவில்லை. என்னை நிமிர்ந்து பார்த்துவிடுவாளோ என்று தயக்கத்துடன் நானும் தலை குனிந்துகொண்டேன். அந்தச் சிறுமி தானாகவே, ‘நல்லாயிருக்கு!’ என்று சொல்லியபடி பைக்கில் ஏறிக்கொண்டாள். அவர்கள் புறப்பட்டுப் போய்விட்டார்கள்.
வீடு திரும்பிய என்னைப் பார்த்து, ‘பத்து நிமிஷத்து வேலை. இதுக்குப் போய் எதுக்கு இத்தனை பதற்றம்?’ என்று கேலி செய்தாள் மனைவி. அந்தக் கோடை முழுவதும் வேப்பம்பூக்களைப் பார்ப்பது என் குற்ற உணர்ச்சியை அதிகப் படுத்துவதாக இருந்தது.

ராட்சச ராட்டினத்தில் பெட்டிகள் சரேலென்று கீழே இறங்கும்போது அடிவயிற்றில் ஏற்படும் பதைப்பு போல, வாழ்க்கையின் சுழற்சி நம்மை நிலைகுலைக்கின்றது. ஆனாலும், மேலே போவதும் கீழே இறங்குவதும் தானே ராட்டினம்! நாள்பட யாவும் பழகிப் போய்விடுகின்றன. நகரத்துக்கு வந்த பிறகு நண்பர்கள் சர்வ சாதாரணமாக கையில் உள்ள மோதிரத்தை அடமானம் வைப்பதையும், பைக்கை அடமானம் வைத்துப் பணம் புரட்டுவதையும், நாலைந்து கிரெடிட் கார்டுகளும் கண்ட பிறகு, சாலையோரத்தில் தன் உடம்பில் தானே சவுக்கால் அடித்துக் கொள்ளும் நபரைப் போலத்தான் வாழ்வு நம் யாவரையும் வைத்திருப்பது புரிந்தது.
இந்த நிகழ்வுக்குப் பிறகிலிருந்து, தினசரி பேப்பர்களில் வரும் ஏல விளம்பரங்களைக் காணும்போதெல்லாம்அந்த நபர்கள் அனைவரும் எனக்குமிக நெருக்க மானவர்கள் போல் உணர்வேன். நீங்களும், நானும், முகம் தெரியாத யாவரும் அடமானம் வைக்கும் தராசுத் தட்டின் முள்ளை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த வர்கள்தானே என்று பெயரில்லாத பந்தம் ஒன்று உருவாகிவிடுகிறது.
கதவு என்று ஒரு கதை. ஒரு குடும்பத்தில் ஏற்படும் சரிவைச் சொல்லும் அற்புதமான கதை. எழுதியவர் கி.ராஜநாராயணன். கரிசல் இலக்கியத்தின் முன்னோடி. மண்ணின் வாசனையும் ருசியும் கொண்ட எழுத்து இவருடையது. நவீன தமிழ் இலக்கியத்துக்கு கரிசல் பூமியை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும். இவரது கதையுலகம் அதுவரை தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றிராத அசல் கிராமத்து முகங்களைப் பதிவு செய்தது. நம் காலத்தின் மூத்த கதை சொல்லியான கி.ராஜநாராயணன் மக்கள் மொழியிலே இலக்கியம் படைப்பவர்.
”கதவு” கதை வெளியாகி நாற்பது வருடங்களுக்கும் மேலாக கடந்துவிட்டது. ஆனாலும், இன்று வாசிக்கும்போதும் அதன் ஈரம் அப்படியே இருக்கிறது. அக்கதை எட்டு வயது லட்சுமியும் அவளது தம்பி சீனிவாசன் என்ற சிறுவனும் வாசற் கதவில் ஏறிக்கொண்டு கதவாட்டம் ஆடுவதில் துவங்குகிறது.

பகல் நேரங்களில் அம்மா கைக் குழந்தையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி வீட்டில் விட்டு விட்டுப் போன பிறகு, அவர்கள் கதவில் ஏறிக் கொண்டு, அதை ஒரு பஸ் போலக் கற்பனை செய்து கொண்டு முன்னும் பின்னுமாக ஆடி விளை யாடுவது ஒரு வாடிக்கை. ஒரு நாள் லட்சுமி எங்கிருந்தோ கொண்டுவந்து ஒரு தீப்பெட்டிப் படம் ஒன்றை கதவில் ஒட்டி அழகு பார்க்கிறாள்.
ஒரு நாள் தீர்வை கட்டத் தவறியதால் கிராமத்து தலையாரி நாலு ஆட்களோடு வந்து, வீட்டு கதவைப் பிடுங்கி எடுத்துக்கொண்டு போய் விடுகிறான். அதை லட்சுமியால் தாங்க முடியவில்லை. அவள் கரைந்துகொண்டு இருக்கிறாள். கதவில்லாத வீட்டைக் கண்டதும் லட்சுமியின் அம்மாவுக்கு அடிவயிற்றில் இருந்து வேதனை எழும்புகிறது. அவள் குழந்தைகள் பார்ப்பதைக்கூடப் பொருட்படுத்தாமல் அலறி அழுகிறாள்.
கூலி வேலைக்காக மணிமுத்தாறு போயிருந்த லட்சுமியின் அப்பா, பல நாட்களாக வீடு திரும்பவேயில்லை. கார்த்திகை மாசத்துக் குளிரில் கதவில்லாத வீட்டில் வாடைக்காற்று ஊசி குத்துவது போல அவர்கள் உடம்பைத் துளைக்கிறது. குளிர் தாங்க முடியாமல் கைக்குழந்தை இறந்துபோகிறது.
ஒரு நாள் சீனிவாசன் தங்கள் வீட்டுக் கதவு, சாவடியின் பக்கத்தில் நிராதரவாகக் கிடப்பதைக்கண்டு அக்காவிடம் ஓடி வந்து சொல்கிறான். அவர்கள் ஓடி அதை ஆசையோடு தொட்டுத் தடவுகிறார்கள். அதில் பற்றியிருந்த கரையானை லட்சுமி தனது பாவாடையால் துடைக்கிறாள். இந்தச் சந்தோஷத்தில் சீனிவாசனைக் கட்டிக்கொண்டு முத்தமிடுகிறாள். இருவரின் கைகளும்பலமாக கதவைப் பிடித்துக்கொண்டு இருந்தன என்பதோடு கதை முடிகிறது.
திருவிளையாடல் புராணத்தில், பிட்டுக்கு மண் சுமந்தபோது, சிவன் வேலை செய்யவில்லை என்று அவரது முதுகில் அடி கொடுக்கிறார்கள். அந்த அடி ஊரில் இருந்த யாவரின் முதுகிலும் விழுந்தது என்று வருகிறது.

புராணம் சொல்வது நிஜமோ, பொய்யோ தெரியாது. ஆனால், வாழ்வில் நமது அவமானமும் வேதனைகளும் நமது குழந்தைகளின் முதுகிலும் அடியாக விழுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. சிவனும் முதுகில்அடிபட்டவர் என்பதால்தானோ என்னவோ, அவர் மீதும் நெருக்கமான அன்பு வருகிறது. என்ன செய்வது... மண்புழுவுக்கு இரண்டு தலைகள் இருந்தும் அது மண்ணில்தான் ஊர்ந்துகொண்டு இருக்கிறது. வாழ்வின் இயல்பே இதுதான் போலும்!
சாகித்ய அகாடமி விருது பெற்ற கி.ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் பிதாமகர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். சுனை நீரைப்போல சுத்தமானதும்ருசிமிக்கதும் இவரது எழுத்து. 1958-ல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கை களையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.
கி.ரா. என்று நண்பர்களால் அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராக வேலை செய்த பெருமைக்குரியவர். நல்ல இசை ஞானம் கொண்டவர்.
கோபல்ல கிராமம், கிடை, வேஷ்டி, கதவு, கோபல்லபுரத்து மக்கள், கரிசல் காட்டுக் கடுதாசி, பிஞ்சுகள், அந்தமான் நாயக்கர் போன்றவை இவரது முக்கிய படைப்புகள். கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, எண்பது வயதான கி.ரா. தற்போது பாண்டிச்சேரியில் வாழ்ந்து வருகிறார்

வியாழன், 18 பிப்ரவரி, 2010

விவசாய நிலங்களை காப்பாற்றுவோம்

விவசாய நிலங்களை காப்போம் 

காந்தியின் பொருட்களை ரூ. 9.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார் இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர் சாராய சாம்ராஜியத்தின் மன்னன் என்று கூறப்பட்டாலும், நமது நாட்டின் பெருமையை விலைபோகாமல் காப்பாற்றியதற்காக இவரை நான் பாராட்டுகிறேன். ஆனால், அந்த பொருட்களை வைத்திருந்த ஜேம்ஸ் ஓடிஸ் எழுப்பிய கோரிக்கைகள் நம்மை சிந்திக்க வைத்துள்ளன.

"ஓடிஸ் இந்திய அரசு பட்ஜெட்டில் ராணுவ செலவுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு பதிலாக, ஏழைகளின் சுகாதார வசதிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்" என்ற ஒரு கோரிக்கையை வைத்திருந்தார்.

இதில் உள்ள உண்மையை நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்துமே பாதுகாப்பு துறைக்காக தங்களது மொத்த உற்ப்பத்தியில் பெரும் பகுதியை செலவிடுகின்றன. இருப்பினும் காந்தி - அகிம்சை போதித்த இந்தியா பல விதமான பிரச்சனைகளுக்கும்,வன்முறைகளுக்கும், அவற்றின் வேராக இருக்கும் காரணிகளை கண்டு பிடித்து அதற்க்கு தீர்வு காணாமல், கண் மூடித்தனாமாக பாதுகாப்பை அதிகரித்துக்கொண்டே சென்றால், ஒவ்வொரு குடி மகனுக்கும், ஒரு பாதுகாவலர் என்ற நிலைக்குத்தான் வழி வகுக்கும்.

அதே போல, அரசு 40 சதவீகம் கல்வி அறிவு இல்லாதவர் இருக்கும் இந்திய தேசத்தில் படிப்பை வளர்க்க பயன் படுத்தும் தொகை இந்தியாவின் மொத்த உற்ப்பத்தியில் வெறும் 3.5% தான். ஆனால், சர்வதீச நாடுகளை எடுத்துக்கொண்டால், 4.9% ஆகவும், வளரும் நாடுகளில் 3.8% ஆகவும் உள்ளது. அதே போல, சுகாதாரம் மற்றும் மருத்துவத்திற்கு 0.7% மே துக்கப்படுகிறது. இது சர்வதேச அளவில் 3.2% ஆகா உள்ளது!

இந்திய அரசு இது போலவே, வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கும், விவசாயிகளுக்கும் (அவர்களின் பயிர் கடன் வட்டியை தள்ளுபடி செய்யவும்) பல ஆயிரம் கோடிகளை ஒதுக்குவதாக கூறுகிறது. ஆனால், அந்த தொகை, போய் சேர வேண்டிய கிராம புற ஏழை மக்களுக்கு சென்றடைகிறதா என்றால் இல்லை! (விவசாயிகளை கேட்டால், விவசாய கூட்டுறவு வங்கிகளில் முதலில் கடனே தருவதில்லை என்றும் பாதி நாட்கள் இந்த வங்கிகள் பூட்டியே கிடக்கிண்டறன என்றும் வாங்காத கடனுக்கு வட்டி தள்ளுபடி செய்தால் என்ன அசலை தள்ளுபடி செய்தால் என்ன என்று கேட்கின்றனர்?!). காரணம் தேசமெங்கும் பரவிக்கிடக்கும் ஊழல், லஞ்சம், இன்னும் பிற...

இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார் மஹாத்மா காந்தியடிகள். ஆம் நாஞ்சில் நாடன் அவர்கள் சொன்னதைப் போல, கிராமங்களில், விவசாயமாக, கைத்தொழிலாக, தொன்மையான சடங்குகளாக, நாட்டுவைத்தியமாக, சிறு தெய்வங்களாக, நாட்டார் கலையாக, விருந்தோம்பலாக, ஆசாபாசங்கள் நிறைந்த அன்பாக, சிற்றோடைகளாக, வால் உயர்த்தித் திரியும் கன்றுகளாக, நாவற் பழ மரங்களாக, குப்பை மேனிச் செடிகளாக, ஒற்றையடிப் பாதைகளாக வாழ்கிறது.

ஆனால் இந்த கிராமங்களின் உயிர் மூச்சாக இருக்கும் விவசாயத்தை நமது ஆட்சியாளர்கள் எவ்வாறு கவணிக்கின்றனர்?

எனக்கு தெரிந்த ஒரு விவசாயி ஒரு முறை சொன்னார், "இப்போது நாங்கள் எதிர்நோக்கும் பிரட்ச்சனை எல்லாவற்றிலும் பெரியது வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறைதான், தோட்ட வேலை செய்ய ஆட்கள் வராததால், பலர் விவசாயத்தை கைவிட்டு, தங்கள் விவசாய நிலங்களை சொற்ப விலைக்கு விற்று விட்டு கிடைக்கும் பணத்தை வைத்து நாட்க்களை கடத்த வேண்டிய சூழலில் இருக்கின்றோம்".

நீங்கள் சொல்வதை போல் பெரு நகரங்களுக்கு இடம் பெயரும் விவசாயிகள் மட்டும் அல்ல. தங்கள் கிராமங்களிலும் விவசாய தொழிலாளர்கள் விவசாயத்தை கைவிட்டுவிட்டு, அரசாங்கம் அறிவித்திருக்கும் கிராம புற வேலை வாய்ப்பு திட்டத்தை நோக்கி சென்றுவிட்டனர். இதன் மூலமாக கிடைக்கும் கூலி விவசாய வேலை செய்வதை விட சற்று அதிமாக இருக்கிறது அதனால் வயக்காடுகளில் கஷ்டப்படுவதை விட இந்த திட்டத்தில் குறைவான வேலை செய்து கிடைக்கும் கூலியை தொழிலாளர்கள் விரும்புகின்றனர்.

மேலும், விவசாயம் செய்பவர்கள், தாங்கள் விளைவித்த பொருட்களை விற்கும் பட்சத்தில் கிடைக்கும் லாபம் மிகவும் சொர்ப்பமாதாக இருக்கிறது என்ற கவலையை தெரிவிக்கின்றனர். உதாரணமாக கரும்புக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை போதுமானதாக இல்லை, காய் கறிகளை பயிரிடுவோர் தங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் இடைத்தரகர்களிடம் மிக மிக குறைந்த தொகையையே பெற முடிகிறது..ஆனால், இடைத்தரகர்களோ, அதை பெரும் லாபங்களுக்கு கை மாற்றி விடுகின்றனர்.

இதை தடுப்பதற்கும் அரசு எந்த உருப்படியான நடவிடிக்கையும் எடுக்கவில்லை. இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது யாதெனில், விவசாய பண்டங்கள், அதை விளைவிக்கும் விவசாயிக்கு பயனளிக்கும் வகையிலும் லாபம் அடையும் வகையிலும் இருந்தால், விவசாயக் கூலியை அதிகரிக்கலாம், தொழிலாளர்கள், ஆர்வத்துடன் வருவார்கள், இந்த தொழிலை செய்ய இளைஞர்கள் முன் வருவார்கள், விவசாய நிலங்களை அழியாமல் காப்பாற்றலாம், நாடு செழிக்கும்.
அதை விடுத்து வேலை வாய்ப்பு தருகிறேன் என்று (நோயின் காரணத்தை அறிந்து மருந்து கொடுக்காமல், அந்த நோய் ஏற்ப்படுத்தும் வலிக்கு, வலி நிவாரணி மூலம் தீர்வுகாண்பதை போல்) விவசாயத்தை நசுக்கினால், ஒரு நாள் அந்த நோய் புரைஓடி உயிரைக்கொல்லும்.

இதற்கெல்லாம் காரணம், விவசாயிகளின் உண்மை பிரட்ச்சனையை உணர்ந்து நீக்காமல், மேம்போக்காக சில திட்டங்கள் மூலமும், கவர்ச்சி திட்டங்கள் மூலமும், ஓட்டு எண்ணிகையை பெருக்கவே ஆட்சியாளர்கள் முனைவது தான் 

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

காஷ்மீர் - புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு


 
இந்தியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட காஷ்மீர்இயற்கை எழில் சூழ்ந்த உலகின் மிக அழகான நிலப்பரப்புகளின் பட்டியலில் முதன்மையாகத் திகழ்ந்தது. ஆனால் இன்றுகாஷ்மீர் பள்ளத்தாக்கு காணும் இடமெல்லாம் மரணப் புதைகுழிகளால் நிரம்பி யுள்ளது. ஈழத்தில் நடைபெறும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு மவுனசாட்சியாகஇந்திய அரசு இருப்பதன் காரணம்அது தன்னளவில் அதே இனப்படுகொலையை தன் நாட்டு மக்கள் மீதே நடத்திக் கொண்டிருப்பதுதான் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. உலகின் மிகக் கொடூரமான ராணுவ அடக்குமுறையின் மூலம்காஷ்மீரில் ஓர் இனப்படுகொலையை இந்திய ராணுவம் நிகழ்த்தி வருகிறது. இவற்றையெல்லாம் அரசு மூடி மறைத்து வந்தாலும்அங்கு புதைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சடலமும் தன் கதையை இந்த உலகுக்கு அறிவிக்க துடித்துக் கொண்டிருக்கிறது.
"தாயின் முன்பு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்த வேண்டும். இதுதான் அந்த ராணுவ வீரனின் ஆசை. 'வேண்டாம் எங்கள் இருவரையும் விட்டுவிடுங்கள்என அந்தத் தாய் ராணுவ வீரனின் மிதியடிகளைப் பிடித்து மன்றாடுகிறார்கதறுகிறார். 'என்னால் இதை நிச்சயம் காண இயலாதுஎன்னை வேறு அறைக்கு அழைத்துச் செல்லுங்கள் அல்லது கொன்று விடுங்கள்' என்கிறார் அவர். அந்த ராணுவ வீரன் வன்புணர்வுக்கு ஆயத்தம் ஆகும் வகையில் தன் உடைகளைக் களைந்து கொண்டே,உன் ஆசைப்படியே நடக்கட்டும் என அவருடைய நெற்றியில் தானியங்கி துப்பாக்கியை வைத்து சில சுற்றுகள் தோட்டாக்களை செலுத்துகிறான். தன் காரியத்தை தொடர்கிறான்.''
இதுபோன்ற ஓராயிரம் கதைகளைகாஷ்மீர் சென்று வந்துள்ள    மனித உரிமைக் குழுக்கள் பதிவு செய்துள்ளன. இந்த சம்பவம் கொடுங்கோல் ஆட்சி நடக்கின்ற தேசத்திலோராணுவ சர்வாதிகார ஆட்சி நடக்கின்ற நாட்டிலோ நடைபெறவில்லை. மாறாகவளர்ந்து வரும் வல்லரசுஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என செல்லமாய் உலக ஊடகங்களால் வர்ணிக்கப்படும் இந்தியாவில்நடைபெற்ற ஒரு நிகழ்வே. இந்திய ராணுவமும் அதன் துணைப் படைகளும் நாள்தோறும் காஷ்மீரிலும்வடகிழக்கிலும் வாடிக்கையாக நடத்தும் அட்டூழியங்களில் ஒன்றே. 1989 2009 வரையிலான காலப்பகுதியில் மட்டும் காஷ்மீரில் 8,000 பேரை காணவில்லை. 70 ஆயிரம் பேர் போலி மோதல் சாவுகளிலும் அரசின் பாதுகாவலிலும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களைப் பற்றிய தகவல்களை அறிய 1990 முதல் மட்டும் 15,000 மனுக்களை வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த மரண எண்ணிக்கை கூடமிகக் குறைந்த அளவில்தான் கணக்கிடப்பட்டுள்ளது.
செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட காஷ்மீர் பள்ளதாக்கு
இவ்வாறு சட்ட விரோதமாகக் கொல்லப்படுபவர்களை ராணுவம்துணை ராணுவப் படைகள்ஜம்மு காஷ்மீர் காவல் துறை என அனைவரும் ஒரே முறையில்தான் அப்புறப்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு கொல்லப்படுபவர்களின் சடலங்களை ஏதேனும் ஒரு கிராமத்தில் அல்லது சிறு நகரத்தில் உடனே புதைத்து விடுவது என்பதை வழக்கமாக மாற்றிவிட்டிருக்கின்றனர். அண்மையில் காஷ்மீரில் (இந்தியா நிர்வகித்து வரும் காஷ்மீர் பகுதியில்) பல கும்பல் புதைகுழிகளை "உலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான தீர்ப்பாயம்கண்டுபிடித்துள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த அங்கனா சாட்டர்ஜிபர்வேஸ் இம்ரோஸ்கவுதம் நவ்லகா,ஜாகிர்உத்தின்மீகிர் தேசாய்குர்ரம் பர்வேஸ் ஆகியோர் மேற்கொண்ட மிகத் தீவிரமான ஆய்வுப் பணிகளின் விளைவாக "புதையுண்ட சாட்சியம்என்று தலைப்பிடப்பட்ட அறிக்கை நவம்பர் 2009இல் வெளியிடப்பட்டது. உலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான தீர்ப்பாயத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களுடன், "காணாமல் போனவர்களின் பெற்றோர் அமைப்பும்இந்த ஆய்வை மேற்கொள்வதில் உறுதுணையாக இருந்தது. பாந்திபூராபாராமுல்லா,குப்வாரா பகுதி மக்களும் இந்த ஆய்வறிக்கை முழு வடிவம் பெற ஊக்கமளித்தனர்.
காஷ்மீரின் குப்வாராபாராமுல்லாபாந்திபூரா மாவட்டங்களில் மட்டும் 2,700கும்பல் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை எல்லாம் எங்கோ ரகசியமாக உள்ள புதைகுழிகள் அல்ல. பள்ளிக் கூடங்கள்நகர சதுக்கங்கள்வழிபாட்டு மைதானங்கள்காடுகள்வயல்வெளிகள் என மக்களின் வாழ்விடங்களெங்கும் இது போன்ற திடீர்புதை குழிகள் அரும்பியுள்ளன. அலங்கரிக்கப்படாதபெயரிடப்படாதகுறிக்கப்படாத மயானங்களாக இவை அங்கே முளைத்துள்ளன. இவற்றை மக்கள் தங்களின் அன்றாட பணிகளின் ஊடாக கவனித்து வருகின்றனர். அவர்களின் நினைவுகளில் இந்தப் புதை குழிகள் அசைக்க முடியாத இடத்தை ஆக்கிரமித்துள்ளன. ஆனால்இதைப் பற்றி அங்கு யாரும் அடுத்தவர்களிடமோதங்கள் குடும்பத்தாரிடமோ கூட பகிர்ந்து கொள்வதில்லை. உள்ளிருந்தே கொதிக்கும் நினைவு களாகஅடக்குமுறையின் உறைந்த படிமங்களாக அவை உள்ளன.
அடையாளம் காணப்பட்ட 2,700 புதைகுழிகளில் 2,943 சடலங்கள் இருந்தன. இதில் பெரும் பகுதியானவை ஆண் சடலங்கள். 154 புதைகுழிகளில் இரண்டுக்கும் மேற்பட்ட சடலங்கள் இருந்தன. இந்த சடலங்கள் எல்லாம் பெரும்பாலும் இரவு நேரங்களில் கொண்டு வரப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன. பொதுவாகஇங்குள்ள கிராமப் பெரியவர்களுக்கு மாலையில் பிணங்கள் வருகின்றன என்ற தகவல் மட்டுமே ராணுவத்தினரிடமிருந்து வரும். இந்த சட்ட விரோதமான காரியத்தை செய்ய மறுத்தால்அடுத்த நாளே நீங்கள் எங்காவது அருகில் உள்ள மாவட்டத்தில் புதைக்கப்படும் பிணங்களின் குவியலில் இடம் பெறக்கூடும்.
பிறகு ஊர் பெரியவர்கள் ஆட்களை தயார் செய்துகுழிகளை வெட்டிவிட்டு கடும் குளிரில் காத்திருக்க வேண்டும். ராணுவ வாகனம் இரவில் மரண ஊர்தியாக வந்து சேரும். பெரும் பகுதியான சடலங்களில் வன்கொடுமைக்கான தடயங்கள்தீக்காயங்கள்தோட்டாக்கள் துளைத்த அடையாளங்கள் தான் இருக்கும் என புதைத்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வேலைகளில் ஈடுபடும் எவருக்கும் எந்த ஊதியமும் வழங்கப்படுவதில்லை. பொதுவாகபுதைக்கப்படுபவர்களைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்தும் நடைமுறைகள் எதுவும்பின்பற்றப்படுவதில்லை.
பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள ஹமாம் மார்க்கோட் என்ற இடத்தில் உள்ள புதைக்குழிகள்
இருப்பினும் ராணுவத்தின் வாய்மொழியான அல்லது எழுதப்படாத ஒரே விளக்கம் இதுவே: இவர்கள் அனைவரும் வெளிநாட்டுத் தீவிரவாதிகள். இவர்கள் நம் நாட்டு எல்லைக்குள் நுழைய முயன்றனர் அல்லது வெளியே தப்பிக்க முயன்றனர்.'' இத்தனை அடக்குமுறைகளையும் கடந்து மக்களிடையே இந்த சடலங்களைப் பற்றி துல்லியமான விவரணைகள் நாட்டார் வழக்காறு போலஇந்த கிராமங்களில் இருளில் மிதக்கும் இரவு பனி மீது ஏறி தன் பயணத்தைத் தொடங்கும். இந்த அடையாளங்களை பெண்கள்ஆண்கள் தங்கள் சங்கேதக் குறியீடுகளின் மூலம் பகிர்ந்து கொள்வர். பல நேரங்களில் மாவட்டங்களை கடந்தும் கூட தொலைவிலிருந்து முதியவர்கள்பெண்கள் இங்கு வந்து இன்னும் தெளிவாகக் குறிப்புகளை கேட்டுச் செல்வார்கள். சில நேரங்களில் அவர்கள் தங்களின் பிள்ளையை,கணவரை மீட்டும் சென்றுள்ளனர். மீண்டும் தோண்டி எடுத்து அடையாளத்தை தக்க சான்றுகள் மூலம் நிரூபித்து,தங்களின் சொந்த கிராமத்திற்கு எடுத்துச் சென்று அடக்கம்செய்துள்ளனர்.
பாராமுல்லா மாவட்டத்தில் மட்டும் 1,122 புதைகுழிகள் காணப்பட்டுள்ளன. குப்வாரா மாவட்டத்தில் 1,453புதைகுழிகளும்பாந்திபோரா மாவட்டத்தில்125 புதைகுழிகளும் இருக்கின்றன. மூன்று மாவட்டங்களில் மட்டும் 2,943சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. "உலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான தீர்ப்பாய'த்தின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் அங்கனா சாட்டர்ஜி, “இத்தகைய மரணக் குழிகள்இனப்படுகொலை அல்லது போர்க் குற்றங்கள் மற்றும் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களிலிருந்து அரசு தப்பிக்க முடியாது. இந்திய ராணுவத்தினரும் துணை ராணுவத்தினரும் தண்டனை மற்றும் விசாரணையிலிருந்து தப்பித்துக் கொள்ளவேஇத்தகைய மரணக் குழிகளை உருவாக்கி இருக்கலாம்'' என்கிறார்.
பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள கிச்சாமா கிராமத்தில் இரு மரணப் புதைகுழிகள் வெவ்வேறு இடங்களில் காணப்பட்டன. முதல் பகுதியில் 105 மரணக் குழிகள் இருந்தன. அதன் அருகில் 60 மரணக் குழிகள் இருந்தன. அந்தக் கிராமத்தில் உள்ள சமூகப் பெரியவர்தாங்கள் இது வரை 230 சடலங்களை அடக்கம் செய்ததாகத் தெரிவிக்கிறார். கட்டுப்பாட்டு எல்லைப் பகுதிக்குள் நுழைய முயன்ற வெளிநாட்டுத் தீவிரவாதிகள் தான் இவர்கள் என ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். சில மரணக் குழிகளின் மீது மண்ணை குவியலாக குவித்தும்கற்களை குவித்தும் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள்.
அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும் பொழுது, “ஒரு முறை மூன்று பேருடைய எலும்புகள் மட்டுமே இங்கு கொண்டு வரப்பட்டன. தீவிரவாதிகளாகக் கருதப்பட்ட இந்த மூவரின் உடல்களும் முற்றாக எரிக்கப்பட்டிருந்தன. பாராமுல்லா வில் நடந்த தாக்குதல்களில் ஒரு வீட்டில் வைத்து இவர்கள் கொல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள். நாங்கள் ஒரே புதைகுழியில் அந்த மூவரின் எலும்புகளையும் புதைத்தோம். அவர்களின் உடைகளை அருகில் இருந்த மரத்தில் கட்டினோம். அந்த உடைகளில் இருந்த லேபிள்கள் அகற்றப்பட்டிருந்தன. அவர்களின் உடைமைகளிலிருந்த தாயத்துகளையும் மரத்தில் கட்டிவிட்டோம்'' என்கிறார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒருவர் திடுக்கிடும் மற்றொரு செய்தியை தெரிவிக்கிறார்: பல சமயங்களில் இந்திய ராணு வம் என்னை கைது செய்து சித்திரவதை செய்துள்ளது. நான் தீவிரவாதத்திற்கு உடன்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இங்குள்ள பல மரணப் புதைகுழிகளை நான் பாகிஸ்தானியர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு புதைத்ததாக அவர்கள் கூறினார்கள். அதுவும் சடலத்திற்கு 35,000 ரூபாயை நான் பெற்றதாகக் குற்றம் சாட்டினர். என்னைத் தொடர்ந்து எங்கள் கிராமத்தில் பலரையும் ராணுவத்தினர் அழைத்துச் சென்று சித்திரவதை செய்தனர். அதன் பிறகு எங்கள் கிராமமே கூட இனிஇது போல் பெயரிடப்படாத அடையாளமற்ற பிரேதங்களைப் புதைப்பதில்லை என முடிவெடுத்தோம். ஏறக்குறைய 2002முதல் எங்கள் கிராமத்தில் யார் இறந்தாலும் இங்கு புதைக்காமல் அருகில் இருக்கும் சேஹால் கிராமத்தில்தான் புதைத்து வருகிறோம்'' என்கிறார்.
உலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான தீர்ப்பாயம் தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ள 2,943 பிரேதங்களும் தங்களுள் ஒரு மிகப்பெரிய வரலாற்றை சுமக்கின்றன. அந்த சடலங்களின் பின்புலத்தில் தாய்மார்கள் மாரடித்து அழும் ஓலக்குரல்கேட்கும் எவர் மனதையும் கனக்கச் செய்யும். கடந்த 30 ஆண்டுகளாக இம்மக்கள் சந்தித்து வரும் அலைக்கழிப்பான வாழ்க்கை பெரும் சலிப்பையும்வாழ்வின் மீது பற்றற்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. எல்லா குடும்பங்களிலும் யாரேனும் ஒருவர் இருவர் இல்லாத ஊனம் பெரும் மவுனமாய் உலவுகிறது. காஷ்மீரில் உள்ள ஒரே ஒரு மனநல மருத்துவமனையில் மட்டும் இதுவரை 68 ஆயிரம் பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமூகபொருளாதாரநிலைகளின் சீர்குலைவுபதற்றம் தரும் மன அழுத்தம் என அன்றாட வாழ்வே பெரும் துன்பம்தான். அரசுகளின் தோல்விக்கு மக்கள் மிகப் பெரும் விலையை கொடுத்து வருகின்றனர். ஒடுக்குமுறைபலாத்காரம்சித்திரவதைசுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை ஒடுக்குதல்சர்வதேச அழுத்தங்களை மதிக்காத போக்கு என காஷ்மீரில் துயரத்தின் புதிய அத்தியாயத்தை நடைமுறைப்படுத்துவதில் ராணுவமும் அரசும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இவர்களுக்கு வலு சேர்க்கும் வகையில்எல்.கே. அத்வானி இங்கு அடிப்படைவாத சூத்திரத்தை மீண்டும் மீண்டும் ஒப்பித்து வருகிறார். அத்வானியின் புனைவுப்படிஜம்முவை சேர்ந்த பண்டிதர்கள் தேசபக்தர்கள் என்றும்காஷ்மீர் முஸ்லிம்கள் தேச விரோதிகள் என்றும் தொடர்ந்து கூறி வருகிறார். அமர்நாத் யாத்திரைக்கு மெல்ல மெல்ல காவிச் சாயம் பூசிவிட்டது இந்த கும்பல். 1989 இல் 20 ஆயிரம் பேர் மட்டுமே அமர்நாத் யாத்திரையில் பங்குபெற்றனர். கடந்த ஆண்டு அது 5 லட்சத்தை எட்டி நிற்கிறது. இந்தப் பயணத்தை அண்மைக் கால இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்கள் வழங்கி வருவது கவனத்துடன் பார்க்கப்பட வேண்டிய ஒரு செய்தி. 100 ஏக்கர் நிலத்தை அமர்நாத் வாரியத்திற்கு வழங்கி அரசாங்கம் மீண்டும் அந்தப் பள்ளத்தாக்கு சந்தித்திராத சூழலை உருவாக்கி மேலும் பதற்றத்தை அதிகரித்தது. இத்தனை பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் கூடினாலே அந்த லிங்கம் கரைந்து விடும் என திணையியல் அறிஞர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
அய்ந்து லட்சம் பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும் முஸ்லிம்கள் தான் செய்து வருகின்றனர். அங்கு சென்று வந்த அனைவரும் அந்த உபசரிப்பில் லயித்து வந்த தங்கள் பயண அனுபவங்களை கூறி வருவதைபல செய்திகளின் வாயிலாகவும் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்தப் பயணிகளின் எண்ணிக்கைஅண்மைக்காலமாக அதிகரித்து வருவதற்குப் பின்னால் பல ரகசிய திட்டங்கள் இருப்பதை நம்மால் உறுதியாகக் கூற முடியும். இந்த 100 ஏக்கர் நிலம் அமர்நாத் வாரியத்திற்கு சுமூகமாக கைமாற்றப்பட்டு எந்த சர்ச்சையும் ஏற்படாமல் அமைதி நிலவியிருந்தால்மெல்ல மெல்ல அங்கு இஸ்ரேல் பாணியிலான குடியிருப்புகளை நிறுவும் மறைமுகத் திட்டம் ஒன்று இந்து வலதுசாரிகள் வசம் இருந்தது.
இத்தகைய விஷமமான திட்டங்கள் அனைத்தும் அந்தப் பள்ளத்தாக்கின் அமை தியை மேலும் சீரழிக்கவே உறுதுணை புரி யும். இந்த யாத்திரைகளைப் பின்புலமாக வைத்து அங்கு அமைதி நிலவி வருவதாக அரசு உலக நாடுகளுக்கு அறிவித்து வருகிறது. அண்மைக்கால அறிக்கைகளில் காஷ்மீரை விவரிக்கும் பொழுதுஅதனை 'கலவரம் நடந்து முடிந்த பகுதியாகஅழைத்து வருகிறது. இதுஉலக சுற்றுலா பயணிகளை கவருவதற்கான திட்டமே. இருப்பினும் உலகின் பல முக்கிய நாடுகள் தங்கள் குடிமக்களை காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்துகின்றன.
கலவரம் நடந்து முடிந்த பகுதி என அரசு அழைக்க விரும்பினால்முதலில் அந்த சமூகத்துடன் உரையாடலைத் தொடங்கிபதற்றங்களைத் தணித்து,மக்களின் பங்களிப்பை அதிகரித்துஅமைதியை சென்றடையும் வழிமுறைகளை அல்லவா கண்டறிய வேண்டும்!
காஷ்மீர் பிரச்சனையை புரிந்து கொள்வதற்கு அதன் வரலாற்றை அறிந்து கொள்வதுதான் தீர்வை அடைவதற்கான முதல் நடவடிக்கை. காஷ்மீர்,வடகிழக்கு ஆகிய இந்தியாவின் இரு மாநிலங்களிலும் கடந்த 40 ஆண்டுகளாக பெரும் பதற்றமும்வன்முறையும் நிலவி வருகிறது. 1947இல் இந்தியா சுதந்திரம் பெற்று தனி நாடாக உருவானது முதல் இன்று வரைஅடுத்தடுத்து ஆட்சியில் உள்ள அரசுகளின் குளறுபடியான முடிவுகள்,ஆட்சியாளர்களின் குறுகிய நலன்களின் அடிப்படையிலான செயல்திட்டங்கள்மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகள் என எல்லாம் ஒருங்கிணைந்துஅந்தப் பகுதிகளின் நிரந்தர சீர்குலைவிற்கு வழிவகுத்துள்ளன. பிரிவினையை மூலதனமாகக் கொண்டு செயல்படும் மதவாத சக்திகளும் தங்களின் தீவிர பிரச்சாரத்தால் ஒட்டுமொத்த சூழலை மேலும் இறுக்கமாக்கியுள் ளன.இது அங்கு ஓர் உரையாடலுக்கான சாத்தியத்தை நிராகரித்துமேலும் தவறான புரிதல்களுக்கே வழிவகுத்துள்ளது.
காஷ்மீர் பற்றி அரசும் ஊடகங்களும் இடையறாது செய்து வரும் அவதூறான பரப்புரையால்காஷ்மீரை தவிர்த்த இந்தியாவிற்கு இவர்களின் புனைவு சார்ந்த சித்திரம்தான் மனதில் தங்கியுள்ளது. இது ஏதோ அப்பாவி காஷ்மீர் பண்டிதர்களுக்கும்எந்நேரமும் ஆயுதம் ஏந்தி நிற்கும் காஷ்மீர் முஸ்லிம்களுக்குமான பகையாகவே சித்தரிக்கப்படுகிறது. இதில் மெய் எது பொய் எது என்பதை எடுத்துக் கூற வேண்டிய ஊடகங்களும்,அறிவுஜீவிகளும் தோல்வியை தழுவி நிற்கின்றனர்.
அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு முதல் பின்னர் அங்கு ஆளுநராகப் பதவி வகித்த ஜக்மோகன் வரைதாங்கள் ஏதோ ராஜதந்திரத்தின் மூலம் ஒரு பெரிய சாதனையை செய்யப் போவதாக கற்பனை செய்து கொண்டுமென்மேலும் காஷ்மீர் மக்களின் வாழ்வை சீர்குலைத்ததுதான் மிச்சம். புவி அரசியலில் ஈடுபட்டு அந்தப் பகுதியின் "பெரிய அண்ணனாகஉருவெடுக்க முயன்ற இந்தியாவுக்குஇன்று நிரந்தர தலைவலியான காஷ்மீர் பிரச்சனைஅந்தப் பகுதி மக்களின் வாழ்வை மட்டும் சீர்குலைக்க வில்லைஇந்திய அரசின் நிதிநிலையையும் அது ஆண்டுதோறும் கடு மையாக பாதிக்கிறது. இத்தனை லட்சம் கோடிகள் வீணாக்கப்பட்ட பிறகும் கூடஇந்தியா வசம் உள்ள காஷ்மீரின் வரைபடத்தை வெளியிட அரசு இன்று வரை தயாராக இல்லை. காஷ்மீர் வரைபடம் என நாம் நம்பும் ஒரு வரைபடம் முற்றிலும் கற்பனையானது. அதனை கல்விக் கூடங்கள்ஊடகங்களின் வாயிலாக மக்களின் மனங்களில் பதிய வைத்து மொத்த சமூகத்தை யும் மூளைச் சலவை செய்கிறது.
காஷ்மீர் பண்டிதர்களை அரசு பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற்றியது பெரும் முட்டாள்தனம் என்பதை பல்வேறு நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. ஜனநாயக வழியிலான எந்த செயல்பாட்டுக்கும் அங்கு சாத்தியம் இல்லை என உணர்ந்த பிறகுதான் இளைஞர்கள் வேறு வழிகளை நோக்கிச் சென்றனர். சகோதரர்களாக வரலாறு நெடுகிலும் வாழ்ந்து வந்த பண்டிதர்களையும் முஸ்லிம்களையும் எதிர் எதிராக நிறுத்த முடிவு செய்த இந்திய அரசின் நிலைப்பாடு கண்டனத்திற்குரியது. பண்டிதர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாகவே அரசு வெளியேற்றியது. காஷ்மீர் பண்டிதர்களின் வீடுகள் அனைத்தையும் இந்திய ராணுவப் படையினர் தங்கள் அலுவலகங்களா கவும்முகாம்களாகவும் மாற்றிக் கொண்டன. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட காஷ்மீர் பண்டிதர்களின் குடும்பங்களுக்குஅதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை யைப் பொறுத்து நிவாரணமும்,அவர்களின் வீடுகளுக்கு பெரும் தொகையை வாடகையாகவும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இவர்களைப் போல் இந்திய அரசு வேறு எந்த இனக்குழுவிற்கோபாதிக்கப்பட்டவர் களுக்கோ நிவாரணம் வழங்கியதில்லை. பார்ப்பன அதிகார வர்க்கம்தான் நம்மை ஆண்டு வருகிறது என்பதற்கு வேறு சான்றுகள் வேண்டுமா?
உலகின் மிகக் கொடூரமான மனித உரிமை மீறலை அமெரிக்கா ஈராக்கிலும்ஆப்கானிஸ்தானிலும் நிகழ்த்தி வருவது நம் காலத்து வரலாறு. பிற நாடுகளை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா ஈராக்கில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் படையினரையும்ஆப்கானிஸ்தானில் 67 ஆயிரம் அமெரிக்க படையினரையும் நிறுத்தியுள்ளது. ஆனால்கடந்த30 ஆண்டுகளில் தனது படை பலத்தை காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெருக்கியுள்ள இந்திய அரசுஇன்றைய தேதியில் மட்டும் 6 லட்சத்து 67 ஆயிரம் ராணுவ வீரர்களை அங்கு நிறுத்தியுள்ளது. இது நமக்கு பல உண்மைகளை எடுத்துரைக்கிறது. உலக அளவில் ஒரு நிலப்பரப்பில் மட்டும் இத்தனை அடர்த்தியான ராணுவ இருப்பு எப்பொழுதும் இருந்ததில்லை.
காஷ்மீர் மக்களின் விருப்பமெல்லாம் அவர்களின் இனக்குழு தன்மையைப் பாதுகாப்பதும்இந்திய அரசின் இணைப்பு ஒப்பந்தப்படி காஷ்மீரின் தற்சார்பைப் பேணுவதும்தான். 2000இல் "அவுட்லுக்ஆங்கில ஏடு நடத்திய கருத்துக் கணிப்பை இங்கே நினைவுபடுத்துவது பொருத்தமானது. அது இவ்வாறு கூறுகிறது : 74 சதவிகித மக்கள் தங்களின் காஷ்மீரி அடையாளத்துடனேயே வாழ விரும்புகின்றனர்; 16 சதவிகித மக்கள் காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய தற்சார்புவேண்டும் என்கின்றனர்; 2 சதவிகிதத்தினர் பாகிஸ்தானுடன் இணைய விரும்புகின்றனர். 37சதவிகிதத்தினர் இந்திய அரசியல் அமைப்புக்கு உட்பட்டுத் தீர்வு காணவே விரும்புகின்றனர். காஷ்மீரிகளின் உண்மை மனநிலையை மிகத் துல்லியமாக வெளிக்கொணர்ந்த கருத்துக் கணிப்பு இது. ஆனால் இந்த 2 சதவிகித பிரிவினை மனநிலை உள்ளவர்களுக்காக இந்திய அரசு மொத்த பள்ளத்தாக்கையே ஆயுதக் கிடங்காக மாற்றிமக்களை சித்திரவதை செய்வது எப்படி நியாயமாகும்?
அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தீர்வு காண்பதைத் தவிர்த்துகாஷ்மீர் மக்களை போருக்கு மத்தியில் வாழ நிர்பந்தித்து வருகிறது இந்திய அரசு. காஷ்மீர் இந்தியாவின் ராணுவ சோதனைக்கூடமாகவே உள்ளது என்றால் அது மிகையல்ல. அங்கே நீங்கள் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம்பள்ளிக்குச் செல்லும் மாணவியை வீதியில் வைத்து சுடலாம்பேருந்து நிலையத்தில் காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம்பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தலாம்ஆயுதத்தை சோதித்துப் பார்க்க சிலரை கொல்லலாம். இன்னும்இன்னும்... எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் 1958, பதற்றப் பகுதிச் சட்டம் 1976,ஜம்மு காஷ்மீர் பொது மக்கள் பாதுகாப்பு சட்டம் 1978, தீவிரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைச் சட்டம் 1985, பொடா 2002... "இந்தப் படை போதுமாஇன்னும் கொஞ்சம் வேண்டுமாஎன தேசபக்தர்களின் முழக்கங்கள் காதில் கேட்கின்றன.
உங்களுக்கு தேவையானது எல்லாம் நீங்கள் இந்திய ராணுவத்தின் உடையை அணிந்திருக்க வேண்டும். இப்படி நீங்கள் செய்யப்போகும் "தேசபக்த காரிய'ங்களுக்கு ஏற்ப இந்திய அரசியல் சாசனத்தை வளைத்துநிமிர்த்திதிருத்தி நாள்தோறும் ஒரு சட்டத்தை உருவாக்கி தேச பக்தராக அறிவித்துக் கொண்டேயிருக்கும். தேசத்தின் பெயரால் அரசு வன்முறையை நியாயப்படுத்தும் ராணுவத்தினருக்குஒவ்வொரு குடியரசு நாள் விழாவிலும் பதக்கங்கள் வழங்கிப் போற்றும் சிந்தனையில் மாற்றம் ஏற்படாதவரைகாஷ்மீரில் மாற்றம் என்பதற்கு சாத்தியமில்லை.
காஷ்மீரில் மட்டும் கடந்த 20 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேர் ராணுவத்தால் அனாதைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களின் மனைவிகளுக்கு விதவை ஓய்வூதியத்தை தர மறுக்கிறது அரசு. இவர்கள் "அரை விதவைகள்'. இவர்களின் கணவர்கள் இறந்து விட்டதற்கான ஆதாரம் இருந்தால் மட்டுமே ஓய்வூதியம்வழங்க முடியும் என்கிறது அரசு. மறுபுறம் ராணுவ வீரர்களின்தற்கொலை விகிதம் ஏறுமுகத்தில் உள்ளது. 2002 2009க்குள் மட்டுமே 169 ராணுவத்தினர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளாக காஷ்மீரில் நடைபெற்று வரும் சூழலை கூர்ந்து கவனித்தால்ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. இந்தியாபாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு மக்களும் இணக்கமான நல்லுறவையே விரும்புகின்றனர். இருநாட்டு எல்லை நெடுகிலும் உள்ள மக்களிடையே பண்பாட்டு ரீதியிலான ஒத்திசைவும் பரிமாற்றமும் இன்றளவும் நிலவுகின்றன. ஆனால் இரு நாட்டு அரசுகளும் இருபுறமும் பதற்றம் நிலைப்பெறவே விரும்புகின்றனர். மக்களின் கோரிக்கைகள் முன்னிலை பெறும்போதும்மக்களுக்கு எதிரான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பொழுதும் காஷ்மீர் பிரச்சனை இயல்பாகவே ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பெறுவதுதிட்டமிட்ட ஒன்றாகவே தோன்றுகிறது.
இந்த மரணப் புதைகுழிகளைசடலங்களை மேலும் சிதைக்காமல் பாதுகாத்துவெளிப்படையான ஒரு விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுகுற்றம் நிரூபணமாகும் தருணத்தில் கடும் நடவடிக்கைகளை எடுக்கபட வேண்டும். கொடூரமான இந்த சட்டங்களை அரசு திரும்பப் பெற்றால் தான் அங்கு மக்கள் ஜனநாயக வழியிலான தங்கள் உரிமைகளை முன்வைத்துப் போராடிதங்கள் சுயநிர்ணய உரிமையைப் பெற இயலும். இல்லை எனில்,பாராமுல்லாவில் ஒரு கிராமப் பெரியவர் கூறியது போல்தான் எதிர்காலத்தில் நடக்கும் :
குழந்தைகள் எங்களிடம் இந்த புதைகுழிகளைப் பற்றி கேட்கிறார்கள். ஏன் இங்கே இத்தனை ராணுவத்தினர் உள்ளனர் என்பதைப் பற்றியும் மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். வன்முறையில் இறப்பது இயற்கையானது தான் என்கிற புரிதலை அவர்கள் வளரும் போதே ஏற்படுத்திக் கொள்கிறார்கள்''இந்தப் பெரியவரின் வரிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மொத்த தேசமும் இந்த கணத்தில் தலை குனிந்துதான் நின்றாக வேண்டும். l
எங்கிருக்கிறது கார்கில்?
கார்கில் என்றவுடன் இந்திய ராணுவம் வெற்றிக் கொடி நாட்டியதுதான் நம் மனங்களில் வந்து கம்பீரமாய் நிற்கும்! ஆனால்கார்கில் காஷ்மீரில் எங்கு உள்ளது என்பதை நீங்கள் யாராவது வரைபடத்தை எடுத்துப் பார்த்திருக்கின்றீர்களாபார்த்தால் பெரும் அதிர்ச்சி மட்டுமே மிஞ்சும். நம் மனங்களில் பதிந்துள்ள ஜம்மு காஷ்மீர் வரைபடத்தின் எல்லைக் கோடு நெடுகிலும் தேடினாலும் கார்கில் எங்கும் கிடைக்காது. கார்கில்,மிகச்சரியாக காஷ்மீர் வரைபடத்தின் மய்யத்தில் இருக்கிறது. மய்யத்தில் இருக்கும் கார்கிலை ராணுவம் யாருடன் போரிட்டு மீட்டது?
அதன் பிறகுபல காஷ்மீர் வரைபடங்களை எடுத்துப் பார்த்த போதுதான் உண்மை விளங்கியது. காஷ்மீரின் ஒரு பகுதி சீனா வசம் உள்ளது. அதனை அக்சாய் சீன் என்று அழைக்கிறார்கள். அடுத்து வடக்கே உள்ள காஷ்மீரின் பெரும் பகுதி பாகிஸ்தான் வசம் உள் ளது. அதனை "பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்என்றும் ஆசாத் ஜம்மு காஷ்மீர் என்றும் இரு சாரரும் அவர்களது வசதிக்கேற்ப அழைக்கிறார்கள். இது தவிர்த்து இரு தேசங்களிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொண்டுள்ள ஒரு பெரும் நிலப்பரப்பு உள்ளதுஅது "ஆசாத் காஷ்மீர்' (விடுதலையடைந்த காஷ்மீர்) என்று அழைக்கப்படுகிறது.
எஞ்சியுள்ள பகுதி மட்டும்தான் இந்தியா வசம் உள்ளது. அதனை நாம் ஜம்மு காஷ்மீர் என்றும்பிறர் இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர் என்றும் அழைக்கின்றனர்.இந்தப் பகுதிகளை எல்லாம் பிணைக்கும் கோடுதான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (Line ofControl) என்று அழைக்கப்படுகிறது.      
உடனடி விசாரணை தேவை’ - அம்னஸ்டி
சிறீநகரில் இருந்து செயல்படும் "காணாமல் போனவர்   களின் பெற்றோர் அமைப்புமார்ச் 29, 2008 அன்று தனது ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதன்படிஉரி மாவட்டத்தின் 18 கிராமங்களில் மட்டும் இதுவரை 940 சடலங்கள் பல கும்பல் புதைகுழிகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. 2006 முதல் அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. உலக மனித உரிமைஅமைப்பான "அம்னஸ்டி இன்டர்நேஷனல்இந்த தகவல்களின் அடிப்படையில்இந்திய அரசு உடனே விசாரணையை நடத்த வேண்டும் என கண்டிப்பான குரலில் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும். குற்றம் புரிந்தவர்கள் மீது முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டுசட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் "அம்னஸ்டிகேட்டுக் கொண்டது.
Courtesy: International People’s Tribunal of Human Rights and Justice in India Administered Kashmir. ‘Buried Evidence : Unkown, Unmarked, and Mass Graves in India Adminisrered Kashmir’ by Angana P.Chatterji, Parvez Imroz, Gautam Navalakha, Zahir Parez Imron, Gauam Navlakha, Zahir Ud-Din, Mithir Desai, Khurram Parvez
-அ.முத்துக்கிருஷ்ணன்
தலித் முரசு ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை

நன்றி கீற்று